நடிகர் விஜயின் 49- வது பிறந்த நாளை அவருடை ரசிகர்கள் விருப்பப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்தனர் ,
பல இடஙகளில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ராசிபுரம் அடுத்த காக்காவேரி என்ற இடத்தில் தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் டீசல்க்கு 3 ரூபாய் மற்றும் 1லிட்டர் பெட்ரோல்க்கு ரூ.2.50 பைசா தள்ளுபடி கொடுப்பது நடந்தது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல் போடுவதற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
மதுரையில் இளைஞர் ஒருவர் கோச்சடையில் நடத்திவரும் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 250 வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை உணவுகளையும் நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக வழங்கினார். மேலும் அவர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 150 மாணவர்கள், முதியோர் இல்லம் மற்றும் காப்பகத்தில் பயிலும் சிறுவர், சிறுமியர்கள் என 500 பேருக்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, அவித்த முட்டை போன்றவற்றை இலவசமாகக் கொடுத்தார்.
விஜயின் படங்களுக்கு ஆள் உயர மாலை, ஆராதனை, பால் அபிசேகம் போன்றவைகளும் ஆங்காங்கு நடந்தேறின. பல இடங்களில் விஜயின் பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்கள் அவரை தமிழக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தே தீருவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரங்களை விஜய் ரசிகர் மன்றத்தினர் பரிசாக வழங்கினார்கள்.
000