ஏப்ரல்.20
திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அண்ணாமலை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனக் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது. உதயநிதி ஸ்டாலின் சர்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.
அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.