செப்டம்பர் 05-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கைக்குள், கிட்டத்தட்டமுழுதாக வந்து விட்டது.பிரதமர் மோடியின் பக்கத்தில் நாற்காலி போடப்பட்டு அவர் அருகே அமரும் நிலைக்குஈ.பி.எஸ். அந்தஸ்து வளர்ந்து விட்டது.
மதுரை அதிமுக மாநாட்டில் தனது செல்வாக்கை காட்டிய பெருமிதத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். மதுரை மாநாடு, மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறியும் பணியை, உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தார், ஈபிஎஸ். அந்த அதிகாரி தலைமையிலான குழு பல்வேறு மட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பான அறிக்கையை ஈபிஎஸ்சிடம் அளித்துள்ளது.மாநாட்டு பணிகளில் சொதப்பிய மூத்த தலைவர்கள் பெயர் அதில் உள்ளது. கிராஸ் செக் செய்த ஈபிஎஸ், அதில் உண்மை இருப்பதை அறிந்துகொண்டார்.அவர்கள் மீது நடவடிக்கை உண்டா எனதெரியவில்லை.
இதனை தொடர்ந்து,மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறியும் வேலையையும் அந்த ஐ.பி.எஸ்.அதிகாரியிடமே கொடுத்துள்ளார்.அவர் தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் சுத்தி சுத்தி வருகிறது. இதற்கிடையே அதிமுகவில் அதிரடி மாற்றத்தை உருவாக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். மக்களவை தேர்தலை சந்திக்க புதிய வியூகம் அமைத்துள்ளார். இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட அதிமுகவில் மொத்தம் 74 மாவட்ட செயலாளர்கள் உண்டு. அவர்களில் 6 பேர் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். எஞ்சிய 68 பேர் ஈபிஎஸ் அணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார்.அதன்படி அதிமுகவில் 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சோ.ராமசாமி நாடகம் பாத்த மாதிரி ஒரு பீலிங் இருங்குங்க, பழனிசாமி சார்.
000