ஏப்ரல்.28
அதிமுக ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
2011-2018 வரையிலான அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO) அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிககள் குழு சோதனை நடத்தியது.
அதில் டிஜிட்டல் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.