ஏப்ரல் 23
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாகக் கூறப்படும் ஆடியோ உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பா.ஜ.க. தலைவர்கள் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று மாலை சந்தித்தது. இந்தச் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.