June 08, 23
ஆவின் நிறுவனத்தில் போலி பதிவெண் கொண்ட வாகனத்தை இயக்கி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஆவின் நிர்வாகத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனம் செயல்பட்டதாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆவின் உதவி பொது மேலாளர் (விற்பனை பிரிவு) சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 06.06.2023 அன்று பணியில் இருந்த போது ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த TN 23 AC 1352 என்ற அதே எண்ணில் மற்றோரு வாகனமும் உள்ளே நுழைந்ததை பார்த்து நானும் பொதுமேலாளரும் ஆவணங்களை சரிபார்த்தோம். அதில் தினேஷ்குமார் என்பவரின் வாகனம் உண்மையானது என்றும் மற்றொரு வாகனம் போலியான பதிவெண் கொண்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனம் சிவகுமார் என்பவரது என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து சிவக்குமாரிடம் கேட்டபோது தனது வண்டியின் ஆவணங்களை வீட்டில்
வைத்திருப்பதாகவும் அதனை எடுத்து வருவதாக கூறி சென்றார். பின்னர் அந்த வண்டியை ஆவின் நிறுவனத்திலேயே நிறுத்தி வைத்திருந்தோம். பிறகு அன்று நான் இரவு பணியில் இருந்த போது சுமார் 11:30 மணியளவில் சிவக்குமார் மற்றும் அவரின் ஓட்டுநர் விக்கி ஆகிய இருவர் வந்து போலியான பதிவில் கொண்ட வாகனத்தை வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறி வாகனத்தை எடுக்க முயன்றனர் அதனை நான் எடுக்கக் கூடாது என தடுத்தேன்.
இதற்கு சிவகுமார் என்னை அவதூறான கெட்ட வார்த்தைகளால் திட்டி “வண்டியை எடுடா எவன் தடுக்கிறான் என்று பாக்குறேன்” என கூறி வாகனத்தை எடுக்க முயற்சித்தனர். அதற்கு நான் இப்போது வண்டியை எடுக்க வேண்டாம் காலையில் பொது மேலாளர் வந்த பிறகு அவரிடம் தகவல் தெரிவித்து எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்ல ஓட்டுனர் விக்கி வண்டியை ஆன் செய்து என்னை பார்த்து நீ தடுத்தினா உன்ன கொன்னுடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து வண்டியை இருவரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து எடுத்து சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக எங்கள் பொது மேலாளருக்கு தகவல் தெரிவித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் ஆகவே என்னை கெட்ட வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அம்மனுதில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சத்துவாச்சாரி காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவலாளி மேற்பார்வையாளர் சாய்ராம் கூறுகையில்..
நேற்று இரவு காவலர் பணியில் இருந்தபோது வாகனத்தை ஏற்ற முயன்றுள்ளனர் அதனால் நாங்கள் பயந்தோம் பின்னர் இரண்டு பேரை தாக்கி விட்டுதான் விக்கி, சிவா ஆகிய இருவர் ஆவின் நிறுவனத்திற்குள் இருந்த வாகனத்தை எடுத்துச் சென்றனர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.