எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கிடைத்ததன் பின்னணி !

ஆகஸ்டு,24-

சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகர் என அழைத்தனர்.அதிமுகவை எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு ’புரட்சித்தலைவர்’ என பட்டம் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி’ என கட்சி தொண்டர்கள் அழைத்தனர்.

இந்நிலையில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ என பட்டம் சூட்டப்பட்டது.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈபிஎஸ்சின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இதன் பின்னணியில் இருந்துள்ளார்.

உதயகுமாரின் விசுவாசியான பாலு என்பவர் மூலம் ஈபிஎஸ்சுக்கு’புரட்சி தமிழர்’ பட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. இந்து சமய ஆதீனம், முஸ்லிம் ஹாஜி , கிறிஸ்துவ பாதிரியார் ஆகிய மூன்று மதங்களை சேர்ந்த பெரியவர்கள் இந்த பட்டத்தை வழங்கினர்.

’ஈபிஎஸ்சுக்கு பட்டம் வழங்க போகிறோம்.உங்கள் கையால் அதனை கொடுக்க வேண்டும்’ என மூவரையும் பாலுவே அதிமுக மாநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த ரகசியத்தை பகிரங்கமாக போட்டு உடைத்த நிலையூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய சாமிகள் , மேலும் தெரிவித்த விஷயம் இது:

‘’அதிமுக மாநாட்டுக்கு பாலு தான் என்னை அழைத்து சென்றார். எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் அளிக்க போகிறோம் என தெரியும். ஆனால் என்ன பட்டம் என்பது முன்கூட்டியே தெரியாது. மேடையில் அவர்கள் அறிவித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்’ என்கிறார், நிலையூர் ஆதீனம்.

ஈபிஎஸ்சுகு பட்டம் சூட்ட எவ்வளவு செலவு ஆச்சோ?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *