ஆகஸ்டு, 21-
மதுரை அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமியின்
அரசியல் வாழ்க்கையில் புதிய உதயத்தை உருவாக்கி விட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு முன் பத்தோடு பதினொன்றாக அதிமுகவில் இருந்த அவர், இன்று கட்சிக்குள் மட்டுமின்றி,தமிழகத்திலும் பெருந்தலைவராக உருவெடுத்து
விட்டார். மதுரை மாநாடு அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு,தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் பழனிசாமிமதுரையில் இந்த மாநாட்டை நடத்தியது, வெளிப்படை..கட்சி தொடங்கி 50ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என
பெயரிடப்பட்டிருந்தது.
கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படாத நிலையில், முழுக்க முழுக்க அதிமுகவினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் மாநாட்டை நடத்தினர்.வெள்ளிக்கிழமை முதலே தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர்.அன்று இரவு எடப்பாடி பழனிசாமி மதுரை வந்து விட்டார்.நேற்று காலை மாநாடு
தொடங்கியது. எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கட்சி தொண்டர்கள் பாரம்பர்யமாக அளிக்கும் அத்தனை மரியாதைகளும்எடப்பாடி பழனிசாமிக்குவழங்கப்பட்டது மாநாட்டுக்ககாலையில் கலந்துகொள்ள புறப்பட்ட அவருக்கு , திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட. 5 அடி உயர வெள்ளிவேலை அதிமுக தொண்டர்கள் பரிசாக அளித்தனர்.
முதல் நிகழ்வாக, அதிமுகவை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து 51 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரமாண்ட கொடியை ஏற்றினார். அப்போது, 600 கிலோ பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து தூவப்பட்டன.
இதனைத்தொடர்ந்து 3000 இளைஞர்கள் அங்கு குழுமி ஈ.பி.எஸ்.சை வரவேற்றனர்.
மாநாட்டில் உரை நிகழ்த்திய ஈபிஎஸ், ‘’மதுரை மண் மிகவும் ராசியானது. இங்கு தொட்டதெல்லாம் துலங்கும்.அப்படிப்பட்ட மாவட்டத்தில் முதல்முறையாக, நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநாடு நடத்தியுள்ளோம். மதுரை மண்ணில் தொடங்கப்பட்ட அனைத்தும் வெற்றிதான். அதிமுகவை ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது-கட்சிஆரம்பித்த 51 ஆண்டுகளில் 31ஆண்டுகள் தமிழ் மண்ணில்அதிமுக ஆட்சி செய்துள்ளது-அதிமுகவை மீண்டும் ஆட்சியில்
அமர்த்துவோம்’என சபதம் மேற்கொண்டார்.
ஈபிஎஸ்சுக்கு ‘புரட்சி தமிழர்’என மாநாட்டில் பட்டம் வழங்கப்பட்டது.’’இந்தமாநாடு வெற்றி பெற்றுள்ளது.மாநாட்டின் மூலம் ஈபிஎஸ், பொதுச்செயலாளர் , மாநில தலைவர் என்ற நிலையில் இருந்து தேசிய தலைவர்களில் ஒருவராகி விட்டார்’என கட்சி நிர்வாகிகள் புகழாரம் சூட்டினர். மதுரை மாநாட்டின் மூலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் ஈபிஎஸ்சையும், கட்சி தொண்டர்கள்,மனப்பூர்வமாக தலைவராக ஏற்றுக்கொண்டது நிரூபனம் ஆனது.
மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக ஈபிஎஸ் தெரிவித்தார்.இது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்றாலும், மதுரையை அதிமுக மாநாடு குலுக்கியது நிஜம்.
000