June 05, 23
ஜூன் 12 நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற ஜூன் 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாக கூட்டத்தை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது . திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜூன் 15ஆம் தேதி இந்தியா திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.