ஜுன், 12. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ. எஃப். எஸ் உட்பட 24 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் நிலை தேர்வு 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 7 லட்சம் பங்கேற்று இருந்தனர். தமிழ் நாட்டில் இருந்து பங்கேற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும்.
இந்த தேர்வு முடிவுகளை இந்திய தேர்வு ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், அடுத்ததாக நடைபெற உள்ள முதன்மை தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். இந்த தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என்று யூ.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.