June 20,23
சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தாார். பின்னர் பீ அவர் பேசியதாவது:
சமூக ஏற்ற தாழ்வுகளை களைத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை – வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருளாதார ஏற்ற தாழ்வை சரி செய்தார்.
கலைஞர் திராவிட மாடல், தத்துவத்தை எடுத்துரைத்து நிலை நாட்டினார் (Dravidian ideology). உள்ளாட்சி கட்டமைப்புகளில் பெண்கள் பங்கு வகித்து நிர்வகிக்க முக்கியத்துவம் கொடுத்தார் கலைஞர். கலைஞரின் தலைமையிலான அரசாங்காத்தில் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு அது நம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சமூக நீதியை நிலை நாட்டி வருகிறார் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு தேஜஸ்வி பேசினார்.