களமிறங்குகிறார் அடுத்த வாரிசு ஹீரோ….. டைரக்டர் இவர் தானாம்!

JUNE 21, 23

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை கோலிவுட் பிரபலம் ஒருவர் இயக்குகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், அவரின் செல்ல மகனும் சேர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, சூர்யா ஹீரோ மாதிரி இருக்கிறாரே. அவரை ஹீரோவாக்கிவிடுங்கள் மக்கள் செல்வனே என்றார்கள். ரசிகர்களின் கோரிக்கை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆம், தன் மகன் சூர்யாவை ஹீரோவாக்கிவிட்டார் விஜய் சேதுபதி. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கப் போவது வேறு யாருமில்லை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு தான். இது தான் அனல் அரசு இயக்கும் முதல் படமாகும்.

நடிகர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்குநராவது புதிது அல்ல. இந்நிலையில் தான் அனல் அரசுவும் கேமராவுக்கு பின்னால் நிற்க முடிவு செய்திருக்கிறார். அவர் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் சூர்யாவை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா விஜய் சேதுபதியின் பட ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. அந்த படத்தில் யார், யார் எல்லாம் நடக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யார் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் எங்களுக்கு விஜய் சேதுபதி ஒரு காட்சியிலாவது வந்துவிட்டு செல்ல வேண்டும் என மக்கள் செல்வனின் ரசிகர்கள் அனல் அரசுவுக்கு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். தன் மகன் சும்மா ஹீரோவாக வரக் கூடாது என்று சூர்யாவை ஏற்கனவே பல கிளாஸுகளுக்கு அனுப்பி வருகிறார் விஜய் சேதுபதி. தற்காப்பு கலை, டான்ஸ் என்று பல விஷயங்கள் கற்று வருகிறார் சூர்யா.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கஷ்டப்பட்டு ஹீரோவானார் விஜய் சேதுபதி. தான் பட்ட கஷ்டத்தை தன் மகன் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

தந்தையின் ஆதரவு, ஆசியுடன் கோலிவுட்டில் ஹீரோவாகிறார் சூர்யா. தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சூர்யா இருப்பதால் விஜய் சேதுபதி தன் மகனின் பெயரை மாற்றுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இல்லை சூர்யா தான் ராசி என நினைத்து சூர்யா விஜய் சேதுபதி என்கிற பெயரை பயன்படுத்த வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சீயான் விக்ரம் இருக்கும் நிலையில் பிரபுவின் மகனும் அதே பெயருடன் தான் வலம் வருகிறார். விக்ரம், விக்ரம் பிரபு போன்று சூர்யா, சூர்யா விஜய் சேதுபதி இருந்தாலும் இருக்கலாம். தமிழ் சினிமாவில் வாரிசுகள் வருவது புதிது அல்ல. காலம் காலமாக வாரிசுகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஜேசனோ நான் கேமராவுக்கு முன்பெல்லாம் வர மாட்டேன், இயக்குநராகப் போகிறேன் என் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜேசன் சஞ்சயை விஜய் சேதுபதி தான் தயாரிக்கும் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் அது நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *