ஜுலை, 26-
45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த கவுண்டமணி, கொஞ்சகாலம் திரைஉலகை விட்டு விலகி இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் 89ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அரசியல் பேசும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
படத்தின் பெயர் – ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
படத்தின் தலைப்பே இது, அரசியலை நையாண்டி செய்யும் சினிமா என்பதை தெளிவாக சொல்லி விட்டது.
கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன்,தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி,ரவிமரியா,வையாபுரி, முத்துக்காளை ,சதிஷ் என பெரிய நகைச்சுவை பட்டாளமே இதில் நடிக்க உள்ளனர். சில வாரிசுகளும் களம் இறங்குகிறார்கள்.
சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.
படத்தை சாய் ராஜகோபால் டைரக்டு செய்கிறார். இவர் கவுண்டமணியின் 70 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியவர்.மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்,கிச்சா வயசு 16 ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
சித்தார்த் விபின் இசை அமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
கவுண்டமணி என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
000