ராயபுரம் பகுதியில் குடிபோதையில் ட்ரிபிள்ஸ் சென்ற இளைஞர்கள் மூவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற நிலையில், போக்குவரத்து போலீசார் அவர்களை துரத்தி பிடித்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயபுரம் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வது போல நடித்து தப்ப முயற்சித்துள்ளனர். ராஜேஷ் என்று இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்ப முயற்சித்த நிலையில், முதல் நிலை காவலர் செல்வராஜ் துள்ளி குதித்து சென்று அவரை பிடித்தார்.
இதனையடுத்து வாகனத்தை தள்ளிச் சென்று தப்ப முயன்ற ராஜேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர் மது அருந்தி உள்ளாரா என, கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் அவர் குடித்திருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார்.