ஏப்ரல் 17
அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார்.
டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா புவனேஸ்வரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது நீக்கப்பட்ட கலால் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் ஊழல் ஆட்சியின் சகாப்தத்தை கொண்டு வருகிறார்.
டெல்லி முதல்வர் (அரவிந்த் கெஜ்ரிவால்) இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார். டெல்லி கலால் ஊழலின் மூளை யார் என்று விசாரிக்க சி.பி.ஐ. வந்துள்ளது. 2021ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில்தான் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டதாக முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் முன்னாள் செயலாளர் மாஜிஸ்திரேட் முன்பு ஒப்புக்கொண்டது உண்மையல்லவா?. இது விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது. அப்போது கலால் துறை அமைச்சராக இருந்த சிசோடியா இந்த கொள்கையை முன்னோடியாக செயல்படுத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் நடந்த இடத்தில் எந்த தடயத்தையும் விட்டு வைக்காததால், தான் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நினைக்கிறார். சிசோடியாவின் கையுறைகளை அணிந்து வழக்கில் கெஜ்ரிவால் ஈடுபட்டார். ஆனால் இப்போது அது கைக்கு வரும் நேரம். கொள்கையில் பெரிய ஊழல் பின்னால் வெளியிட வேண்டும். நீங்கள் முதல்வர், விஐபி என்பதால் மட்டும் விசாரணை நடத்த கூடாதா?. ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மதுபானக் கொள்கை மிகவும் நன்றாக இருந்தால் ஏன் அதை ரத்து செய்தார்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.