கோவையில் மதநல்லிணக்க இப்தார் விருந்து – கிறித்துவ, இந்து மக்கள் இணைந்து ஏற்பாடு

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வழங்கினர்.

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நோன்பு திறப்பில், பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார்,சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்,சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ்,அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் முகம்மது அலி, தலைமை இமாம் அப்துல் ரஹீம் இம்தாதி, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர்,சி.எஸ்.ஐ.திருமண்டல உறுப்பினர் பிரவீன் விமல் மற்றும் அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைவருக்கும் பேரீச்சை,நோன்பு கஞ்சி,பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபி,கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பொங்கல்,தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதாகவும்,அதேபோல இந்த இப்தார் நிகழ்வும் நடைபெறுவதாகக் கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *