சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.

கேரளாவை சேர்ந்த சங்கீதா, 1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சினேகிகன் ஒரு பெண்ணு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

‘என் ரத்தத்தின் ரத்தமே ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார்.பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

விஜயுடன் சங்கீதா இணைந்து நடித்த ‘ பூவே உனக்காக’ படம் அவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது.விக்ரமன் இயக்கி இருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம்.

ஒளிப்பதிவாளர் சரவணனை சங்கீதா 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சரவணன் இயக்குநரும் ஆவார். சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கியவர்.
திருமணத்துக்குப்பின், சினிமாவில் இருந்து விலகி இருந்த சங்கீதா, 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நகர வருதி நடுவில் நியான்’ என்ற படம் மூலம் ரீ –எண்ட்ரி ‘கொடுத்தார். தொடர்ந்து நடிக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வெளியான ‘சாவித்’ எனும் மலையாள படத்தில் நடித்தார். அதன் பிறகு, ‘பராக்கிரமம், ஆனந்த் ஸ்ரீ பாலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்தவர்,25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார்.

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் -2’ படத்தின் மூலம் சங்கீதா தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். 47 வயதிலும்,அதே குறும்பு முகத்துடனும், இளமையோடும் வசீகரமாக இருக்கிறார்.

இந்த படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *