பிப்ரவரி-06,
ஒவ்வொரு சிகரெட்டும் ஒரு மனிதனின் வாழ் நாளில சராசரியாக 19.5 நிமிடங்களைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களின் வாழ் நாளில் ஒவ்வொரு சிகரெட்டும் 22 நிமிடங்களை குறைத்து விடுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் தஙகள் வாழ் நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள்.
‘
அதே நேரத்தில் எந்த வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினாலும் உடல் பாதிப்புகள் குறைந்து விடும் என்பது லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் இங்கிலாந்தின் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது. எந்த வயதில் புகைபிடிப்பதை விட்டாலும் அது வைர புகைபிடித்ததால் இழந்த விலை மதிப்பற்ற நிமிடங்கள், மணி நேரங்கள் மற்றும் நாட்களை மீட்டெடுக்க முடியும் என்று அந்தே ஆய்வுப் பரிந்துரைத்து உள்ளது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வு, ஒரு பாக்கெட்டில் உள்ள சிகரெட்டுகளை புகைத்தால் 7 மணி நேர ஆயுட் காலத்தை இழக்கக்கூடும் என்பதை தெரிவித்து இருக்கிறது.
பத்து ஆண்டுகள் தினமும் பிடிக்கப்படும் ஒரு சிகரெட்டால் ஆணின் வாழ்க்கையில் ஒரு மாதமும் பெண்ணின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களும் திருடப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வு பற்றி கருத்துத் தெரிவித்து உள்ள பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பிரகதி ராவ், நோயாளிகள் புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்தை தாங்கள் காண்பதாக தெரிவித்து உள்ளார்.
“ ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும்போது, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும், மூச்சுத் திணறல் குறைகிறது, மேலும் நுரையீரலில் தொற்று ஏற்படுவதால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயம் குறைகிறது. நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள் மூலம் இதை நாங்கள் அளவிடுகிறோம், இது ஒரு நபர் ஒரு வினாடியில் எவ்வளவு காற்றை வெளியேற்ற முடியும் என்பதை மதிப்பிடுகிறது. புகைபிடிப்பதை நிறுத்தும் நோயாளிகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.”
“புகைபிடிக்கும் போது நுரையீரல் செயல்பாடு 60% ஆக இருந்தால், புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு அது 70% வரை மீளக்கூடும் “ என்று அவர் விளக்கினார்.
*