சிதம்பரம் நடராஜர் கோயிலில் விலை மதிப்புள்ள நகைகள் எங்கே போனது.. அமைச்சர் சேகர் பாபு அதிர்ச்சி.

ஜூன், 27- சிதம்பரம் நடராஜர் கோயிலை பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படும் தீட்சிதர்கள், விலை உயர்ந்த நகைகளை தணிக்கை செய்யக் கூட அனுமதிப்பதில்லை என்று புகார் தெரிவித்தார். நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனம் போல் தீட்சிதர்கள் நினைத்து வருவதாக கூறிய அமைச்சர் சேகர் பாபு, நீதிமன்ற தீர்ப்பின் படி கனகசபையின் மீது நின்று பக்தர்களை சாமி கும்பிட அனுமதித்துள்ளோம் என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரு தினங்கள் முன்பு ஆனித் திருமஞ்னம் என்ற விழா நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை முன் ஏறி பக்தர்கள் வழிபடக் கூடாது என்று தீட்சிதர்கள் நோட்டீஸ் ஓட்யியிருந்தனர். இதை நேற்று ( திங்கள் கிழமை) மாலை போலிஸ் துணையுடன் அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத் தக்கது

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *