சிம்பு படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

சிம்புவின் புதிய படத்தில் சந்தானம் !

காமெடி கலாட்டாவாக உருவாகும் சிம்புவின் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார், சந்தானம்.

கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழில் நகைச்சுவை வேடங்களில் கலக்கி வந்தவர் சந்தானம்.
தனது மூத்த நடிகர்கள் , கதாநாயகனாக புது அவதாரம் எடுத்து, ‘டூயட்; பாடி இருந்ததால், சந்தானத்துக்கும் ‘டூயட்’ ஆசை வந்தது

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஓரளவு வசூல் செய்தது.
இதனை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்த சபாபதி உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன.
கடைசியாக அவர் ஹீரோ வேடம் பூண்ட வடக்குப்பட்டி ராமசாமி, நான் தான் கிங்கு ஆகிய படங்களும் முதலுக்கு மோசம் செய்தன.

சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் சிம்பு.
இதனால் ‘சிம்பு சொன்னால், என்ன வேணுன்னாலும் செய்வேன் ‘ அவ்வப்போது கூறிவந்தார், சந்தானம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிம்பு , ‘எனது புதிய படத்தில் நடிக்க சம்மதமா ? என கேட்டுள்ளார். மறு கேள்வி கேட்காமல் ‘ஓகே’ சொல்லி விட்டார், சந்தானம்.இது , சிம்புவின் 49 –வது படம்.

.பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கும் இந்த படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கியுள்ளது,குறுகிய காலத்தில் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *