ஜுலை,29-
சென்னை அருகே இன்று அதிகாலை, பேருந்து ஒன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் 22 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.
பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த குளிர் சாதன பேருந்தில் பயணிகள் 22 பேர் இருந்தனர். பேருந்த கிட்டத்தட்ட கோயம் பேட்டை நெருங்கிவிட்ட வேளையில் வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதி விபத்துக்கு ஆளானது.
பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்துக் கெண்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்; பூவிருந்தவல்லி, மதுரவாயல் போன்ற இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தனர்.
விபத்து காரணமாகச் சென்னை- பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது ஏன் என்று தெரியவில்லை.
000