சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வான் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்த்ய சிந்தியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர். திறன் அதிகரிக்கப்பட்ட முனையம் மூலம் ஆண்டுதோறும் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை சென்னை விமான நிலையம் பெறும். இந்த நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி,, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை – கோவை இடையேயான தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும்.8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் பயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.