ஜனவரி-19,
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பத்து அமலுக்கு வந்து உள்ளது.
சீன நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலியை அமொிக்காவில் பல கோடி பேர் பயன்படுத்தி வந்தனர். உள் நாட்டுப் பாதுகாப்பு போன்ற காரணங்களை காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த தடை அமலுக்கு வந்து உள்ளதை அடுத்து அந்த நாட்டில் இனி டிக் டாக் செயலியை பயன் படுத்த முடியாது.
இந்தியாவிலும் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
*