தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குபேரா’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சமயத்தில் ‘குபேரா’ படத்தின் தலைப்புக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

அந்த தலைப்புக்கு உரிமை கொண்டாடுபவர் கரிமகொன்ட நரேந்தர் என்ற தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் .

அவர் வாசிக்கும் புகார் பட்டியல் இது :
‘தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘குபேரா’ என்ற தலைப்பை நான் பதிவு செய்துள்ளேன்.அந்த பெயரில் எனது பட ‘த்தின் ஷுட்டிங்’ கை ஆரம்பித்தேன்.இப்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்தான் தனுஷ்- நாகார்ஜுனா நடிப்பில் ‘குபேரா’ என்ற பெயரில் படம் தயாராவது எனக்கு தெரிய வந்தது.
‘குபேரா’ தலைப்பை சேகர் கம்முலா மாற்ற வேண்டும். அல்லது எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். இந்த விவகாரத்தில் திரைப்பட சம்மேளனம் தலையிட வேண்டும்’ என்று நரேந்தர் தெரிவித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டு குறித்து குபேரா படக்குழுவோ இயக்குநர் சேகர் கம்முலாவோ பதில் எதுவும் சொல்லவில்லை.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *