தலைப்புச் செயதிகள் … ( 07-11-2023)

@அதிமுக கட்சியின் பெயர்,கொடி,சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு .. ஓ.பி.எஸ் இனி அதிமுக என்ற லெட்டர் பேடை கூடப் பயன்படுத்த முடியாது.

@அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிப்பதாக நீதிபதி விளக்கம் … எத்தனை முறை வழக்கு தொடருவீர்கள், எத்தனை முறை ஒரே வாதத்தை முன் வைப்பீர்கள் என்றும் பன்னீருக்கு கேள்வி.

@நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தி ஓ.பி.எஸ். குழப்பத்தை விளைவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் … அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டப் பிறகும் லெட்டர் பேடை பயன்படுத்தி தங்களை நீக்குவதாகவும் புகார்.

@பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்தும் சோதனை ஐந்தாவது நாளாக நீடிப்பு … சென்னை, திருவண்ணாமலை, கரூர் உட்பட அனைத்து இடத்திலும் சோதனை தொடருகிறது.

@திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டில் நடந்த சோதனையில் மேலுல் நான்கு கோடி ரொக்கம் கைற்றப்பட்டதாக தகவல் … வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை பெட்டி,பெட்டியாக எடுத்துச் சென்று ஸ்டேட் பேங்கில் ஒப்படைப்பு.

@அமைச்சர் வேலுவின் ஆதரவாளரும் திமுக பெண் நிர்வாகியுமான கோவை மீனா ஜெயக்குமார் வீட்டிலும் ஐந்தாவது நாளாக வருமான வரி்ச்சோதனை…. திருச்சியில மணப்பாறை சாமிநாதன் என்பவர் வீட்டிலும் எ.வ.வேலுவின் பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை.

@கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி நிறுவனங்கள் மேற்கொண்டு உள்ள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு … விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

@மாலத் தீவில் விதிக்கப்பட்ட அபராதத்தை முதலமைச்சர் ஸ்டாலினே செலுத்தி தமிழக மீனவர்களை மீட்டு இருக்கலாம் … எடப்பாடி பழனிசாமி கருத்து.

@கடந்த பிப்ரவரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 80 விழுக்காடு நிறைவு .. மீதம் உள்ள பணிகள் டிசம்பரில் முடிக்கப்பட்டு 6 ஆயிரம் பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

@பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிறபித்த உத்தரவுகள் அனைத்து மாநில அரசுகளுக்குப் பொருந்தும் .. பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றமில்லை என்றும் விளக்கம்.

@மேம்படுத்தப்பட்ட பார்மூலாவைக் கொண்ட பேரிய்ம், சர வெடிகளை தயாரிக்க அனுமதி கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரரவு .. காற்று மற்றும் ஒலி மாசுவை தடுப்பதாற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.

@நீதிமன்ற உத்தரவு படி காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி ஆகிய இரண்டு நேர மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் …125 டெசிபில் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் காவல் துறை கண்டிப்பு.

@மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பும் பணி ஆரம்பம் .. தகுதியானவர்களின் வங்கி கணக்கில் தீபாவளிக்கு முன்பு பணத்தை வரவு வைக்க இருப்பதாக தகவல்.

@பெரம்பலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பபட்ட திமுகவினர் 13 பேருக்கு நிபந்தனை ஜாமீன் .. தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்து பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு.

@சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வட இந்தியர்கள் 500 பேர் பயணித்ததாக புகார் … முன் பதிவு செய்து பயணித்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது பற்றி வழக்குப் பதிந்து விசாரணை.

@சென்னை தேனாம்பேட்டையில் வாடகைக்கு விட்டு இருந்த வீட்டை காலி செய்ய மறுத்ததால் வெல்டிங் வைத்து நடிகர் பிரபு தேவா சகோதரர் பூட்டு .. உள்ளே மாட்டிக் கொண்ட வளர்ப்பு நாய், வெல்டிங்கை உடைத்து போலீசால் மீட்பு.

@ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் முதற்கட்டமாக மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது… சத்தீ்ஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் நடந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு.

@சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் தேர்தலை சீர்குலைக்க வெடிகுண்டு தாக்குதல் … மத்திய ரிசர்வ் படை காவலர் காயம்.

@பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தின் திறமையான தலைவர்களின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதித்தது கிடையாது .. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தம்மையும் காங்கிரஸ் இழிவுபடுத்துவதாக மத்திய பிரேதசத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்.

@நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபசமாக சித்தரித்து வீடீயோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை .. பெண்களை ஆபசமாக சித்தரித்து ஆபாசமாக வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை.

@இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை தயாரிக்க இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க முடிவு .. அனைத்து அனுமதிகளையும் விரைவாக வழங்க பிரதமர் உத்தரவு.

@அடுத்த ஓரிரு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு ..சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தகவல்.

@அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி … மேற்கு கடற்கரையில் மழைக்கு வாய்ப்பு.

@ நடிகர் கமலஹாசன் தமது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்க குடி நீர் தயாரிக்கும் இயந்திரம் பரிசளிப்பு .. மற்ற அரசு மருத்துவ மனைகளிலும் இது போன்ற உபகரணத்தை வைக்குமாறு வலியுறுத்தல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *