*முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தன் விளைவாக ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன… தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
*சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜர்… கடந்த வாரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம்.
*சென்னையில் அரசு பேருந்தில் ஓட்டையில் பெண் ஒருவர் கீழே விழுந்ததை அடுத்து அரசு பேருந்துகளிள் பயணம் செய்வோருக்கு மாவு கட்டு்ம் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரிரியப்படுவதற்கு இல்லை எனறு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் …அரசுப் பேருந்துகள் தரமுற்ற முறையில் இருப்பதையே நேற்றைய விபத்துக் காட்டுவதாகவும் கருத்து
*புதுச்சேரியி்ல் ரோஸ் நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட நிறமி உபயோகிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை …. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள்.
*நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்… விஜயகாந்துக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவ மற்றும் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய அறக்கட்டளை உருவாக்கியதற்கு கூட்டத்தில் நன்றி.
” நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை எம்.பி பதவி தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி”… தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
*டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அண்ணாமலை தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். … அதிமுக தலைமை அதிர்ச்சி.
* கூட்டணிக்கு வருவதற்கான கதவுகளை பாஜக திறந்தே வைத்திருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து … அவர்கள் திறந்து வைத்திருக்கலாம், அவர்கள் வரக்கூடாது என்று கதவை நாங்கள் சாத்திவிட்டோம் என்று பதில்.
*மோடியை பிரதமராக ஏற்பவர்கள் யாராக இருந்தாலும் பாஜக கூட்டணிக்கு வராலம்…டெல்லியில் அண்ணாமலை பேட்டி.
*சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் எனற் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து … ஆம்னி பேருந்துகள் செல்வதற்கான வழித் தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
*சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் … சேலத்தில் கடந்த 2017 – ல் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய வழக்கு விசாரணை.
*உங்களை தேடி, உங்கள் ஊரில்’ முகாம் ஒவ்வொரு மாதமும் 4 -வது புதன்கிழமை நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… தமிழக அரசு உத்தரவு.
*ரூ.4000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகள் 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி…. விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதம்.
*உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில், 6பேர் உயிரிழப்பு … 4 பெண்கள் உட்பட 7 பேர் மீட்பு.
*சென்னை அடுத்த தாம்பரத்தில் காந்தி சாலையில் சிதறிக்கிடந்த ஆறு துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் … வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் நேற்று குண்டு பாய்ந்த நிலையியில் இன்று குண்டுகள் சிக்கியுள்ளது பற்றி போலீஸ் தீவிர விசாரணை
*மத்திய அரசு முறையான நிதி பங்கீடு வழங்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம்….. நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு.
*நாடாளுமன்றத் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்” – பிரதமர் … மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகையில் விமர்சனம்.
*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய ஐந்து சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகதது பற்றி நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் … அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மனு மீது டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
*அஜித் பவார் தலைமையில் இருப்பதுதான் உண்மையான தேசிய வாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சரத்பவார் தரப்பு முடிவு … தங்களையும் மனு தாரராக சேர்த்துக் கொள்ளக் கோரி அஜித்பவார் தரப்பு மனுத் தாக்கல்.
*இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகளாக மட்டும் 15 நாட்களுக்கு வந்து செல்லலாம் என்று ஈரான் அறிவிப்பு … சுற்றுலாவை மேம்படுத்த ஈரான் அரசு நடவடிக்கை.
*மக்கள் நல இயக்கத்தின் மூலம் செய்து வரும் பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று நடிகர் விஷால் அறிக்கை … இயற்கை வேறு முடிவுகளை எடுக்க வைக்குமானால மக்களுக்கா குரல் கொடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் விளக்கம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447