*திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொகுவா மொய்த்ராவின் எம்.பி.பதவியை பறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம் … பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் எம்.பி. பதவி பறிப்பு.
*மொகுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு .. தனது எம்.பி. பதவியை பறிக்குமாறு பரிந்துரை செய்வதற்கு நெறிமுறைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று மொகுவா கருத்து.
*கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கு அளிக்க முடியாது … சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு மீதான விசாரணையை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
*தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் .. ரிக்டர் அளவு கோலில் 3 புள்ளி 2 ஆக பதிவு.
*முதலமைச்சராக இருந்த போது டெண்டர் ஒதுக்குவதில் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்து இருந்த மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு.
*சென்னையில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு திமுக அரசுதான் முழுப் பொறுப்பு .. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி புகார்.
*தேங்கியுள்ள மழைநீரை இனியாவது உடனடியாக அகற்றுமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் .. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் கோரிக்கை.
*மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .. தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளுக்கு நிதி அளிக்கக் கோரிக்கை.
*பொதுமக்களும் தன்னார்வக் குழுக்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு … பொருட்களை வழங்க விரும்புவோர் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொள்ள வலியுறுத்தல்.
*சென்னை வேளச்சேரியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கடந்த 4 ஆம் தேதி சிக்கிய இரண்டு தொழிலாளர்களின் சடலங்களும் மீட்பு .. நான்கு நாட்களுக்குப் பிறகு இரண்டு உடல்களும் கிடைத்தன.
*சென்னை பெரம்பூரில் உள்ள மேயர் பிரியா வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் … வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் வழங்கக் கோரிக்கை.
*திங்கள் கிழமை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் .. தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவிப்பு.
*சென்னையில் டிசம்பர் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கேமிராக்களில் பதிவான போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் ரத்து .. மி்க்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை.
*திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரளாவைச் சோந்த தம்பதி உயரிழப்பு .. வேகமாக வந்த கார் ஸ்ரீரங்கம் – சமயபுரம் சுங்கச்சாவடியை இணகை்கும் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
*சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு .. புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தள்ளிவைப்பதாக திமுக தலைமை அறிவிப்பு.
*முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.. மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு.
*அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 45 கோடிக்கு சொத்துக் குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கு .. குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள 11 பேரும் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றனர்.
*வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியில் மாற்றம் இல்லை … வட்டி விகிதம் 6.5 ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு.
*மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவி ஏற்பு .. 74 வயதாகும் லால்து ஹோமா முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி ஆவார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்தில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்ற போதிலும் முதலமைச்சர்களை தேர்வு செய்வதில் இழுபறி .. தேர்வை விரைவாக நடத்தி முடிக்க பார்வையாளர்கள் நியமனம்.
*வெங்காயம் ஏற்றுமதிக்கு 2024 மார்ச் மாதம் வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு .. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக அரசு நடவடிக்கை.
*ஓடிசா மாநிலத்தில் பவுத் டிஸ்ட்டிலிரி என்ற மதுபான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச்சோதனையில் இதுவரை ரூ 200 கோடிக்கு ரொக்கம் சிக்கியது .. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க முடியாமால் அதிகாகரிகள் திணறல்.
*கடந்த 2022 ஆண்டில் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்தில் 1 புள்ளி 6 லட்சம் பேர் இறப்பு .. விபத்து நடந்த மாநிலங்களில் உ.பி.முதலிடத்திலும் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல்.
*தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி…ஐதராபாத் அருகே தன்னுடைய பண்ணை வீட்டில் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இடுப்பு முறிவுக்கு சிகிச்சை.
*காசாவின் தெற்கு முனை மீது இஸ்ரேல் படைகள் தொடா்ந்து குண்டுவீச்சு .. பொதுமக்களை பாதுகாக்குமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை.
*அமெரிக்கா அதிபர் ஜோ படைன் மகன் ஹண்டர் படைன் மீது இரண்டாவது கிரிமினல் வழக்குப் பதிவு .. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை.