*சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு 3 வது முறையாக தள்ளுபடி… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு.
*செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்க அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் போலியாக மாற்றப்பட்டுள்ளதாக வாதம்…
*சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி இருவரும் சிறையில் அடைக்கப்படுவதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு … கடந்த மாதம் சிறைதண்டனை அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், மேல் முறையீடு செய்வதற்க்கு பொன்முடிக்கு ஒரு மாதம் அவகாசம் தந்திருந்தது.
*சிறையில் அடைக்கப்படுவதை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், தண்டனையை ரத்து செய்து வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற பொன்முடியின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது … எனினும் உச்சநீதிமன்றம் தண்டனையை ரத்து செய்யாததால் பொன்முடி அமைச்சர் ஆக முடியாது.
*ஏமன் நாட்டின் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழி தாக்குதல்… ஏமனில் ஈரான் நாட்டின் ஆதரவுடன் செயல்படும ஹவுதி போராளிகளை ஒடுக்க நடவடிக்கை
*ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதி போராளிகள் குழு செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்குக் கப்பல்களை வழிமறித்து இரண்டு மாதங்களாக தாக்குதல் நடத்துகின்றனர்…. சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி தாக்குதல் நடத்துவதால் பதிலடி கொடுக்க நேரிட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் விளக்கம்
*ஏமன் மீது அமெரிக்கா, பிரிட்டன் ராணுவங்கள் நடத்திய தாக்குதல் எதிரொலி…. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2% அதிகரித்து, ஒரு பீப்பாய் $78.94 ஆகவும், US West Texas Intermediate கச்சா எண்ணெய் விலை 2.1% அதிகரித்து $73.55 ஆகவும் உயர்வு.
*தமிழ்நாட்டுக்கு ₹8,000 கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ₹3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல மனு தள்ளுபடி … வெள்ள நிவாரணம் கேட்பது மாநில அரசு சம்மந்தப்பட்டது என்பதால் தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்ளும் என்று உச்சநீதிமன்றம் கருத்து.
*சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘அயலகத் தமிழர் தினம் – 2024’ விழாவில் அயலக தமிழர்கள் 8 பேருக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவிப்பு … விழாவில் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் மற்றும் 58 நாடுகளின் தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள் என 1000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
*வெளிநாட்டில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கப்படுகிறது என்று அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் பேச்சு … வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம்.
*ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை, அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம்…. ஆபாச படங்களை பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
*நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது … தீர்மான கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட பங்கேற்காத நிலையில் தோல்வி.
*தமிழக அரசு பேருந்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஜனவரி 19- ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு …. தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள கோரிக்ககைள் குறித்துது பேச்சு வார்த்தை நடத்த அரசு தரப்பு முடிவு.
*முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பது ஓர் ஆண்டாக குறைப்பு … தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு..
*படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் கட்டினால் போதும் … அரசாணையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம்.
*குடியரசு நாளான ஜனவரி 26- ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் …தமிழ்நாடு அரசு உத்தரவு.
*தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 20 வயது மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்ததாகப் புகார் … தந்தை பெருமாள், தாய் ரோஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
*தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி சண்முகம், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப. வீரபாண்டியன் தேர்வு … சென்னையில் நானை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் இருவருக்கும் விருதுடன் ரூ 5 லட்சம் ரொக்கமும் வழங்க உள்ளதாக அறிவிப்பு.
*தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு … தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் அமைச்சர் ஒருவர் இடம் பெறுவதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை ஏப்ரலில் விசாரிப்பதாக அறிவிப்பு.
*மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரத்தை 20 நிமிடமாக குறைக்கக் கூடிய அடல் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி … ரூ.17,840 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 22 கி.மீ நீளமுள்ள பாலம் மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
*ராகுல் காந்தி இரண்டாவது கட்ட நடை பயணம் ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தவ்போல் என்ற இடத்தில் தனியார் மைதானத்தில் இருந்து தொடங்குகிறது … மணிப்பூர் பா.ஜ.க. அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் தொடக்க நிகழ்ச்சியை எளிமையாக தொடங்க முடிவு.
*மிகக் குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி .. . DRDO இன்று சோதனை செய்த இந்த நவீன தலைமுறை ஆகாஷ் ஏவுகணை, 70-80 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக குறி பார்த்து அழிக்கும் திறன் கொண்டதாகும்.
*பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் கல்கி திரைப்படம் மே 9- ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிப்பு … அமிதாப் பச்சான், கமலஹான், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் நடித்து உள்ள படம் கல்கி.
*நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும் இந்தி தெரியாது போயா.. என்ற வசனத்துடன் வெளியாகி உள்ள ரகுதாத்தா படத்தின் டீசருக்கு ரசிகர்கள் ஆதரவு … . சுமன் இயக்கியுள்ள ரகு தாத்தா விரைவில் திரைக்கு வருகிறது.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447