*அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கிக் குவிப்பதற்கு வகைசெய்யும் தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதாமானவை, தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடடினயாக நிறுத்தவும் உத்தரவு .
*கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளன … தேர்தல் பத்திரம் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களும் கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுவதாகவும் சுப்ரிம் கோர்ட் அறிவிப்பு.
*தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்க வேண்டும்.. ஸ்டேட் வங்கி வழங்கும் அனைத்துத் தகவல்களையும் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் மார்ச் 13- ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை.
*தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்டை உரிமைகளை பறிப்பதாக உள்ளது… நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம்.
*கடந்த 2018- ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த தேர்தல் பத்திரம் சட்டத்தின் மூலம் ஸ்டேட் வங்கியில் ரூ 1000 முதல் ஒரு கோடி வரை மதிப்புள்ள பத்திரங்களை எத்தனை வேண்டுமானாலும் வாங்கி தாங்கள் விரும்பும் கட்சிக்கு கொடுக்கலாம் … அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
*பத்திரங்களில் வாங்குவோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது… தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் 90 சதவிகிதம் பாஜகவுக்கு கிடைத்தது என்பது புகார். உச்சநீதிமன்றத் உத்தரவால் அரசியல் கட்சி பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல்.
*ஜி எஸ் டி வரி விதிப்பு முறையால் தமிழ்நாட்டுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று சட்ட சபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகார் … தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது என்றும் பேச்சு.
*அமைச்சரவை தயாரித்து தரும் அறிக்கையை சட்டமன்றத்தில படிக்க வேண்டியது கடமை என்பதை மறந்து ஆளுநர் அரசியல் செய்யும் விதமாக நடந்து கொண்டதாக ஸ்டாலின் புகார் … ஆளுநரின் செயல் கோடிக்கணக்கான மக்களை அவமதிக்கும செயல் என்றும் கருத்து.
*நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இந்த மாதம் 24,25 தேதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு … தமிழ்நாட்டில் வாக்குப் பதிவை ஒரே நாளில நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் கருத்துக் கேட்க முடிவு..
*தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு.. நாடாளுமன்றத் தேர்தலில் ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.
*நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை வரும் பிப்.19ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு… வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ₹50,000 மற்றும் ₹2,000 செலுத்தி விண்ணப்ப படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.
*மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதியை முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் … தென் சென்னையை விட்டுக் கொடுக்க திமுகவுக்கு மனமில்லை. அவர் விரும்பும் கோவை, மதுரை அல்லது ராமநாதபுதம் தொகுதியை தருவதில் கூட்டணிக் கட்சிகள் தயக்கம்.
*திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்ற தகவலால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி … காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்த வாரம் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச திட்டம்.
*சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி … நாளை நேரி்ல் ஆஜர் படுத்தவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24 – ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஐந்து நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக திட்டம் … சேலத்தில் 25- ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளதாக தகவல்.
*டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப் பாட்டில் ஒன்றுக்கு ரூ 10 கூடுதலாக வாங்கிக் கொண்டு மது விற்பது என்றும் காலிப் பாட்டில்களை திரும்பக் கொடுத்தால் பத்து ரூபாயை திருப்பிக் கொடுப்பது என்றும் திட்டம் … ஏப்ரல் முதல் தேதி முதல் அமல் செய்ய முடிவு.
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கபட்டு திருச்சி முகாமில் இருக்கும் முருகன் இலங்கை செல்வதற்குப் பயண ஆவணங்களை பெறுவதற்கு நடவடிக்கை … அழைக்கும போது இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறை ஆயத்தம்.
*உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா மனு தாக்கல்…மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அரசு தரப்பு தெரிவித்ததை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
*மதுரையில் பாஜக ஓ.பி.சி. அணித் தலைவர் சக்தி வேல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை … சரக்கு வாகனத்தை விற்பதில் ஏற்பட்ட தகறாரில் கொலை நடந்ததா என்பது குறித்த விசாரணை,
*திண்டிவனம் அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து … குன்றத்தூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இறப்பு.
*கச்சத் தீவு திருவிழாவுக்குச் செல்ல 3,225 பேர் பதிவு, ரூ 85 லட்சத்திற்கும் மேல் வசூல்… கச்சத் தீவு அந்தோணியார் கோயில் அடுத்த வாரம் இரண்டு நாள் திரு விழா …
*அகில இந்திய தொழிற்சங்கள் நாளை ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டதை நடத்த உள்ளதால் முக்கிய பணிகள் பாதிக்கும் என்று எதிர்பார்ப்பு .. அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளார்கள் அனைவரும் கட்டாயம் வேலைக்கு வருமாறு உத்தரவு.
*தமிழ்நாடு அரசுக்கு போதிய அளவு மத்திய அரசு நிதி கொடுத்து உள்ளதாக அணணாமலை பேட்டி … மத்திய அரசு கொடுத்த நிதியைக் கொண்டு பாதிக்ப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 10,500 கொடுத்திருக்க வேண்டும், ஆனால் ரூ 6500 தான் தரப்பட்டு உள்ளது என்றும் விளக்கம்.
*பாஜக அண்ணாமலை, சென்னையில் சாலை வழியாக நடை பயணம் செல்வதற்கு காவல் துறை அனுமதி கொடுக்க மறுத்ததால் நீலாங்கரையில் இருந்து பாலவாக்கத்திற்கு கடல் வழியே படகில் செல்வதற்குப் போட்ட திட்டமும் ரத்து … காவல் துறை கேட்டத் தகவல்களை கொடுக்க முடியாததால் கடல் பயணமும் நிறுத்தம்.
*டெல்லி புறநகரில் திரண்டு உள்ள விவசாயிகள் மூன்றாவது நாளாக போராட்டம் … நேற்றும் நேற்று முன் தினமும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதைக் கண்டிதது பஞ்சாப் மாநிலத்த்தில் ரயில் மறியல்.
*மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதால் இந்த முறை ரேபரெலி தொகுதியில் போட்டியிடவில்லை என்று சோனியா காந்தி அறிவிப்பு … ரேபரெலியில் பிரியங்கா போட்டியிடக் கூடும் என்று தகவல்.
*மத்திய அமைச்சர்கள் 7 பேருக்கு மீண்டும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை …. மக்களவைத் தேர்தலில் நிறுத்தபடலாம் என்று எதிர்பார்ப்பு.
*நடிகர் அமிதாப் பச்சான்- ஜெயா பச்சான் தம்பதிக்கு ரூ 1,578 கோடி சொத்து … மாநிலங்கவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயா பச்சான் தாக்கல் செய்துள்ள மனுவில் தகவல்.
*ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசு தமது 60- வது வயதில் காதலி ஜோடீ ஹெய்டனை திருமணம் செய்து கொள்ள முடிவு … முதல் திருமணத்தில் ஒரு மகன் உள்ள அல்பானீசு,ஹெய்டனை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
*தான் பாட்டெழுதிய முதல் மரியாதை , சிந்து பைரவி, புன்னனை மன்னன், ரோஜா போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்ட சென்னை உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வெளியான தகவலால் தம் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன என்று கவிஞர் வரைமுத்து வலைதளத்தில் பதிவு … இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் கவலை போன்று கார் கடக்கும் என்று உருக்கம்.
*ராஜ்கோட்டில் நடைபெறும் இங்கிலாந்து உடனான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவிப்பு … முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 131 ரன்கள். ஜடேஜா 110 ரன்கள், சர்பாஸ்கான் 62 ரன் குவிப்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447