•தமிழகத்தில் அனைத்துப் பள்ளகளிலும் ஜுலை 19 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டம்.. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.
•இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தர வரிசைப் பட்டியல் வெளியீடு.. தரவரிசைப் பட்டிலில் விழுப்புரம் மாணவன் பிரபஞ்சம் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்.
•ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவடைந்தது. 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
•சட்டப் பல்கலைக் கழகத்தில சேருவதற்கு நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.. அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம் அறிவிப்பு.
•சட்டம் பயிலும் மாணவர்களின் வழிகாட்டுதலுக்காக, ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் பெயரில், சென்னையில் புதிய அகாடமி… முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
•யமுனை ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவதால் டெல்லியை சாலையை சூழ்ந்திருந்த வெள்ளம் லேசாக வடிகிறது.. குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
•டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு.
•ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடைபெற திருப்பு..21- ஆம் தேதி தரிசனம் செய்வதற்கு அனுமதி.
•சென்னை தியாகராயர் நகரில் சோம சுந்தரம் விளையாட்டு மைதானத்தை நவீன மயமாக்க எதிர்ப்பு.. இளைஞர்கள்,சிறுவர்கள் மறியல்.
•பாட்டாளி மக்கள் கட்சியில் 35- வது ஆண்டு விழாவை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் ராமதாஸ்.. 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடப் போவதாக அறிவிப்பு.
•சென்னை கே.கே.நகரில் பணம் வைத்து சூதாடியதாக 20பேரை கைது செய்தது போலிஸ்.. ரூ 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.
•உ.பி. யில் சமாஜ்வாதி கூட்டணியில் இருந்த சுகெல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி பாஜக கூட்டணிக்கு தாவியது.. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ யாதவுக்கு பின்னடைவு.
•அமெரிக்காவில் பல மாகாணங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக உள்ளது.. இரண்டு மாகாணங்களில்ர சனிக்கிழமை 118 டிகிரி பான்ஹீட் வெப்பம் பதிவு.
•அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு… ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்க முடிவு.
•விவசாயிகள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் கருத்தைப் புரிந்து கொண்டால், நாட்டின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்… மத்திய அரசுக்கு ராகுல் அறிவுரை