*தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக நாளை மறுதினம் வருகிறார் பிரதமர் மோடி … சென்னையில் நேரு உள் விளயைாட்டு அரங்கில் 19- ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலா இந்திய போட்டிகளை தொடங்கி வைக்க இருப்பதால் பிரமாண்ட ஏற்பாடு.
*கேலோ இந்தியா போட்டி தொடக்க விழா முடிந்த மறுநாள் 20-ம் தேதி காலை மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்… அதே நாள் பிற்பகல் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்று புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு.
*பிரதமர் மோடி ஜனவரி 20- ஆம் தேதி இரவு ராமேஷ்வரத்தில் ராமகிருஷ்ணர் மடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு … 21- ஆம் தேதி ராமேஷ்வரத்தில் புனித நீரை சேகரித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து டெல்லிக்கு செல்லும் வகையில் பயணத் திட்டம் தயாரிப்பு.
*கடந்த 2018- ல் ஸ்டார்ட் அப் தர வரிசையில் கடைசித் நிலையில் இருந்த தமிழ்நாடு, 2022- ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… கடந்த ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்றும் பெருமிதம்.
*உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகளும், 700 வீரர்களும் பங்கேற்பு… போதிய உடல் தகுதி இல்லாமை, மது அருந்தி வந்தது போன்ற காரணங்களினால் சுமார் 50 வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு.
*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞருக்கு கார் பரிசு … 16 காளைகளுடன் இரண்டாம் இடம் பிடித்த பூ வந்தி சித்தருக்கு மோட்டார் சைக்கிள் அன்பளிப்பு.
*அலங்காநல்லூர்அருகே கீழக்கரையில் தமிழ் நாடு அரசு கட்டியுள்ள பிரமாண்ட ஜல்லிக் கட்டு அரங்கை ஜனவரி 24 – ஆம் திறந்து வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு … அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண இருப்பதாகவும் தகவல்
*முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, உருவப்படத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மலர் தூவி மரியாதை…. தமிழ்நாட்டின் பல இடங்களில் எம்.ஜி.ஆர். படத்தை அலங்கரித்து வைத்து அவரது சினிமா படப் பாடலை ஒளிபரப்பி அதிமுகவினர் கொண்டாட்டம்.
*சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை … எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 107 கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கி கொண்டாட்டம்.
*எம்.ஜி.ஆர். தொலைநோக்கு மிக்க தலைவராக இருந்ததாகவும் அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன என்றும் பிரதமர் மோடி வாழ்த்து … தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிப்பதாகவும் புகழாரம்.
* அதிமுக பிரிந்து கிடப்பதால் நீ பெரியவனா? நான் பெரியவனா? என போட்டி போட்டுக்கொண்டு கட்சியை மறந்துவிட்டதாக வி.கே.சசிகலா கருத்து….எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்தும் பெரிய நன்றிக்கடன் என்று எம்.ஜி. ஆர்.பிறந்த நாள் செய்தியில் உறுதி.
*சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சு விரட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் இரண்டு பேர் மாடு முட்டியதில் உயிரிழந்த பரிதாபம்… ஒருவர் 12 வயது சிறுவன், இன்னொருவர் அடையாளம் தெரியவில்லை.
*மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி … போலீசார் யாரையும் அருகில் நெருங்க விடாததால் 100 மீட்டர் தொலைவில் நின்று கருப்புக் கொடி காட்டி ஆளுநரைக் கண்டித்து முழக்கம்.
*காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரையில் லட்சம் பேர் குடும்பத்துடன் குவிந்தது கொண்டாட்டம் … மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போன்ற இடங்களில் கடலில் குளிப்பதற்கு தடை விதிப்பு.
*மாமல்லபுரம், வண்டலூர் உயிரியில் பூங்கா உட்பட பல இடங்களில் மக்கள் வெள்ளம் … ஏற்காடு, முக்கொம்பு, கன்னியாகுமரி, பிச்சாவரம் போன்ற இடங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம்.
*பொங்கல் திருவிழாவுக்கு வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் … பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்.
*திருப்பத்தூர் அடுத்த பேரணாம்பட்டில் கணவர்(86)இறந்த அதிர்ச்சியில் மனைவி (76)யும் உயிரிழந்த பரிதாபம் .. இணை பிரியாத தம்பதியின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.
*சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற 36 வயது நபர் திருமண ஆசை காட்டி 7 பெண்களிடம் மோசடி செய்ததாக புகார் … ரமேஷை கைது செய்து போலீ்ஸ் விசாரணை.
*நாடளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கை தயாரிப்புக்கு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தனி வெப்சைட் மற்றும் ஈ மெயில் முகவரி … காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்கும் என்று அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் ப.சிதம்பரம் அறிவிப்பு.
*எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் டெல்லியில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மொகுவா மொய்த்ரா எதிர்ப்பு … தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மொகுவா மனு.
*கனடா நாட்டுக்கு மேல்படிப்புக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 86 சதவிகிதம் குறைவு … காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகள உறவில் விரிசல் ஏற்பட்டாதல் இந்திய மாணவர்கள் கனடா செல்வதை தவிர்ப்பு.
*பாகிஸ்தான் எல்லை ஓரம் செயல்படும் ஜெய்ஷி அல்- அதி என்ற தீவிரவாத அமைப்பின் முகாமை அழிக்க ஈரான் நாட்டு ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் … ஈரான் குண்டு வீச்சில் இரண்டு குழந்தைகள் உயரிழந்துவிட்தாக கூறி தாக்குதலுக்க பாகிஸ்தான் கடும் கண்டனம்.
*வான்வழித் தாக்குதலை அடுத்த தங்கள் நாட்டில் இருந்த ஈரான் நாட்டுத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் … ஈரான் நாட்டில் இருந்த தங்கள் தூதரை திரும்ப அழைக்கவும் நடவடிக்கை.
*ஈரான் இந்த ஒரே வாரத்தில் மூன்று அண்டை நாடுகளில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குல் .. . இரு தினம் முன்பு ஈராக் மற்றும் சிரியா மீது தாக்குதல் நடத்திய ஈரான் நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி அதிரடி.
*ஏமன் நாட்டின் ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் … கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி .. செங்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம்
*கடந்த 2018- ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்ட கோலே விளையாட்டுப் போட்டி முதன் முறையாக இந்த முறை தமிழ் நாட்டில் நடைபெறுகிறது … தமிழ்நாட்டில் 19- ஆம் தொடங்கி 31 – ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு.
*18 வயதுக்கு உட்பட்டோருக்கு நடத்தப்படும் கோலோ போட்டியில் 36 மாநிலங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு … தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மற்றும் கபடி, தடகளம், கால்பந்து, குத்துச் சண்டை உட்பட 27 வகையான விளையாட்டுகள் நடத்தப்படும்.
*மதுரை திருமங்கலம் அருகே கோபாலபுரம் கிராமத்தில் முனியாண்டி கோயிலுக்கு 100 ஆட்டுக் கிடாய்களை பலியிட்டு அசைவ விருந்து …. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 5000 பேர் கறி விருந்தில் பங்கேற்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447