*உயர்கல்வித் துறை அமைச்சசர் பொன்முடியின் சென்னை வீட்டில் நடந்த 13 மணி நேர சோதனை நிறைவு… மேலும் விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை.
*விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்முடி கைது செய்யபடலாம் என்று தகவல் பரவுவதால் பரபரப்பு.. திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனை.
*பொன்முடி மற்றும அவருக்கு வேண்டியவர்கள் வீடு, அலுவலகம் ஆகிய10 இடங்களில் காலையில அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது.. பொன்முடியின் சென்னை வீட்டில் ரூ 70 லட்சம் ரொக்கம் மற்றும் அமெரிக்கா பணம் பறிமுதல்..
* வங்கி அதிகாரிகளை பொன்முடி வீட்டுக்கு வரவழைத்து பணப் பரிவர்த்தனைகள் பற்றி விசாரணை.. தடயவியல் அதிகாரிகளை அழைத்தும் கையெழுத்துகள் ஆய்வு
*கடந்த 2006 ஆட்சியின் போது அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரிகளில் இருந்து மண் எடுத்து விற்றதில் நடந்த சட்ட விரோதப் பணப்பறிமாற்றம் குறித்த தகவல்களை சேகரிக்கவே சோதனை.. பொன்முடி மீதான நடவடிக்கைப் பற்றி அமலாக்கத் துறை தகவல்.
*திமுகவை மிரட்டிப் பயமுறுத்தவே அமலாக்கத்துறை மூலம் மத்திய பாஜக அரசு சோதனைகளை நடத்துகிறது.. சோதனைகளுக்கு திமுக கிஞ்சிற்றும் அஞ்சாது என்று மு.க.ஸ்டாலின் பேட்டி.
*தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்க அனுமதி கொடுத்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.. சி.பி.ஐ. சென்னை நீதிமன்றத்தில் தகவல்.
*சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 25 கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் திரண்டனர். இரவு விருந்துடன் கூட்டம் ஆரம்பம்..நாளை முக்கிய தீர்மானங்களை எடுக்கத் திட்டம்.
*மு.க. ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்களுக்கு பெங்களூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு.. தலைவர்களை வரவேற்று நகரம் முழுவதும் விளம்பரப் பதாகைகள் அமைப்பு.
* காங்கிரசுக்கு போட்டியாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ.நாடளுமன்றத் தேர்தல் குறித்து டெல்லியில் நாளை ஆலோசனை.. 38 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக ஜே.பி.நட்டா தகவல்.
*என்.டி.ஏ.கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்..அன்புமணி மற்றும் ஜி.கே.வாசனும் தலைநகர் செல்ல திட்டம்.
*நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட விவகாரம்.. சிதம்பரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனயுடன் பா.ஜ.க.நிர்வாகி சூர்யாவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்.
*நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாயை ஈட்ட பழுதடைந்த மின்சார மீட்டர்களை உடனே மாற்றுவது அவசியம்.. மின்வாரியப் பொறியாளர்களுக்கு தலைமை நிதி அதிகாரி சுற்றறிக்கை.
*கருக்கலைப்பு செய்வதற்கு தமிழ்நாட்டில் 32 மருத்துவக் கல்லூரிகளிலும் தனித்தனி வாரியம் அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு..கர்ப்பிணியை பரிசோதனை செய்து கருக்கலைப்பு பற்றி மூன்று நாட்களில் கருத்து வழங்குவதற்கு நடவடிக்கை.
*அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதி உள்ள பயணாளிகள் யாரையும் விட்டுவிடக் கூடாது.. தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுரை.
*சந்திராயன்- 3 விண்கலத்தை 2- வது சுற்றுக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவு.. விண்கலம் சீராக இயங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.
*போபாலில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு பெட்டியில் தீடீர் தீ..பயணிகள் அலறி அடித்து ஓட்டம்.
*ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு.. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பல ஆயிரம் பேர் குவிந்ததால் நெரிசல்