*உத்தர்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள 41தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுப்படுத்த முடிவு .. அமெரிக்காவி்ல் இருந்து கொண்டு வரப்பட்ட துளையிடு்ம் இயந்திரமும் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
*செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைக்கு மேலும் நான்கு நாட்கள் ஆகலாம் .. ராணுவம் மற்றும் நிபுணர்கள் இணைந்து துளையிட ஏற்பாடு.
*போலி சான்றிதழ் மூலம் அமெரிக்கா செல்வதற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் முயற்சி …. சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரகம் மூலம் குவியும் புகார்களை அடுத்து கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை போலீ்ஸ்.
*ஆந்திராவில் கல்விச் சான்றிதழ் முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்தும் போலியாக கிடைப்பதாக தகவல் .. ஏற்கனவே நான்கு பேரை பிடித்து உள்ள சென்னை போலீ்ஸ் எஞ்சியவர்களையும் பிடித்துக் கொண்டு வர திட்டம்.
*சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு ஐந்து லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும் … சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலார்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
*திருவண்ணமலையில் கார்த்திகை மகா தீபம் .. மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபத்தைக் காண்பதற்கு பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
*ஓசூர் அருகே கோணேரிபள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நின்று இருந்த லாரி மீது கார் மோதி விபத்து .. காரில் பயணித்த இளைஞர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறப்பு, மேலும் இருவர் படுகாயம்.
*கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு நாள் இன்று … உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
*ஹமாஸ் அடுத்து விடுவிக்க உள்ள பிணையக்கைதிகள் பட்டியலை இஸ்ரேலுக்கு அனுப்பியது .. இஸ்ரேலும் தங்கள் தரப்பில் விடுதலை செய்ய உள்ள பிணைக் கைதிகள் பட்டியலை வெளியிட முடிவு.
*சீனாவில் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலி .. மருத்துவ மனைகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு அரசு உத்தரவு.
*பென் ஸ்டோரோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட எட்டு வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிப்பு .. 2024 ஐ.பி.எல். போட்டியிலும் தோனியை தக்க வைத்துக் கொள்வதாக அறிவிப்பு.
*வரும் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் ஒவ்வொரு அணியும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியல் வெளியானது.. முக்கிய வீரர்கள் பலரை விடுவித்துவிட்டு புதியவர்களை சேர்க்க அணிகள் நடவடிக்கை.
*வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது … நவம்பர் 29 ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல்.