*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விரிவாக விசாரணை நடத்தி தடை விதித்து இருந்த நிலையில் தமிழ்நாடு அரசும் ஆலையை திறந்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாக்கல் செய்த காரணங்களை ஏற்றது உச்சநீதிமன்றம்.
*கடந்த 2018 -ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்பு … உயிர்ப்பலி ஏற்பட்டதை அடுத்து எதிர்ப்பு கடுமையானதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
*தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை தமிழக அரசு முன் வைத்ததால் உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி … ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்புக்கு டாக்டர் ராமதாஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு.
*சிவில் நீதிபதிகள் பணிக்கு 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து, திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…. இடஒதுக்கீடு முறையில் குளறுபடி, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட மாற்று பட்டியலை வெளியிட ஆணை.
*திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு … போட்டியிடும் தொகுதிகளை பின்னர் அறிவிப்பதாக திமுக தலைமை அறிவிப்பு.
*தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கும் பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது, அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் … அவர் எந்த திட்டங்களை கொண்டு வந்தார் என்பதையும் அதற்கு நாம் எப்படி தடை போட்டோம் என்பதையும் தெரிவித்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் என்றும் கருத்து.
*சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராமுதன் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை…. படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.
*தமிழ்நாடடில் நாளை தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு… மாநிலம் முழுவதும் தேர்வில் பங்கேற்க உள்ள ஏழரை லட்சம் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து.
*சென்னை: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு… சம்மன் ஒட்டிய நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
*சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையை படம்பிடிக்கச் சென்ற தனியார் தெலைக்காட்சி கேமிரா மேன் தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி புகார்…. போதைப் பொருளுக்கு எதிராக போராடுகிறர்வகளுக்கு தகுந்த பாதுகாப்பு தருமாறு அரசுக்கு கோரிக்கை.
*மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் …. மொத்தமாக 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் கேட்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கம்பெனியில் 50 வீரர்கள் இருப்பார்கள் என்றும் பேட்டி.
*”காங்கிரஸ் எந்த காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை” என்று தமிழ்நாடு காங்கிர்1 கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி …. தமிழ்நாட்டில் “தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும்” என்றும் விளக்கம்.
*கூட்டணி குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜகவில் மாநில அளவில் குழு அமைப்பு…. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் குழுவில் உள்ளனதாகவும் அண்ணாமலை தகவல்.
*மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி வைகோ தொடர்ந்து உள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை… மதிமுகவுக்கு 1996 முதல் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில் ஒதுக்கப்படும் பம்பரம், பொதுச் சின்னம் இல்லை என்பதால் மதிமுகவுக்கு ஒதுக்குமாறு வைகோ வலியுறுத்தல்.
*தமிழக அரசின் வீட்டு வசதித்துறை செயலாளர்கள் கடந்த 15 மாதங்களில் நான்கு முறை மாற்றப்பட்டு இருப்பதாக அன்புமணி தகவல் … கோப்புகளுக்கு ஒப்புதல் தருவதில் அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட மறுப்பதால் செயலாளர்கள் மாற்றப்படுவதாக புகார்.
*முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாம் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும் மோடி மீண்டும் பிரதமராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் பேட்டி … இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் நம்பிக்கை.
*உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு…. ஜனவரி 07, 08- ஆம் நாட்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ₹6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதை செயல்வடிவம் பெறச் செய்திட நடவடிக்கை.
*விழுப்புரத்தில் இருந்து கடலூர், மயிலாடுதுறை வழியாக மெயின் லைனில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மி.யிலிருந்து 110 கி.மீ.யாக அதிகரித்து ரயில்வே உத்தரவு …. இந்த தடத்தில் இயக்கப்படும் சோழன், செந்தூர், உழவன்,மன்னை உள்ளி்ட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் குறைகிறது
*தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை சரி செய்ய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு… சென்னை பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கில் ஊதியம் தருவதற்குக் கூட பணம் இல்லை என்ற புகாரை அடுத்து நடவடிக்கை.
*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கையை நிறைவேற்றிட பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிப்பு… வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றி நடவடிக்கை.
*தமிழகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது…..சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 43,051 இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெறும் என்று அறிவிப்பு.
*இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிக்கை.
*நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ₹4.80ஆக நிர்ணயம் – தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு… முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தகவல்.
*இமாச்சல் பிரதேசத்தில் மாநிலங்கவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்ககளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேரின் பதவியை பறித்து சபாநாயகர் உத்தரவு …. கட்சித் தாவாலால் காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்ற தகவலை அடுத்து நடவடிக்கை.
*மேற்கு வங்க மாநிலத்தில் சந்தோஷ்காலி என்ற இடத்தைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் என்ற திரினாமுல் காங்கிரஸ் பிரமுகர், சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது …ஷேக் ஷாஜகானை ஆறு வருடங்களுக்கு கட்சியில் இருந்த நீக்குவதாக மம்தா பானர்ஜ் அறிவிப்பு.
*ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது பாலியல் பலாத்காரம், நில ஆக்கிரமிப்பு உளிட்ட புகார்களை சந்தோஷ்காலி மக்கள் சுமத்தியதால் திரினாமுல் கட்சி மீது கடந்த சில நாட்களாக கடுமையான விமர்சனம் … அடுத்தடுத்து மேலும் பல வழக்குள் ஷாஜகான் மீது பாயலாம் என்றும் தகவல். பத்து நாள் காவலில் எடுத்து விசாரணை.
*சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் , முதலமைச்சராக இருந்த போது சுரங்கம் ஒதுக்கியது தொடர்பான ச ம்மனை ஏற்று இன்று சிபிஜ முன் ஆஜராகவில்லை ….லக்னோவில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அகிலேஸ் சிபிஜ சம்மன் பற்றி கருத்து தெரிவிக்கவும் மறுப்பு.
*மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 2000 – த்தை தொடும் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை … மீண்டும் விறகு அடுப்பை நாட வேண்டிய நிலை எற்படலாம் என்றும் கருத்து.
*காசா முனை மீது கடந்த அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 30 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பபின் அமைச்சர் அறிவிப்பு… இறந்தவர்களின் பெரும்பாலனாவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் தகவல்.
*பிரிட்டீஸ் இளவரசர் சார்லஸ் மனைவி கேத்தரின் வயிற்றுப் பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொது வெளியில் தென் படாததல் உடல் நிலைக் குறித்து சந்தேகம் … சார்லஸ் உடன் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் கேத்தரின் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்.
*இங்கிலாந்துடன் தர்மசாலாவில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு … காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் ராகுல் அணிக்கு திரும்பவில்லை, பும்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு, வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447