• தலைப்புச் செய்திகள்,  

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு, ஆன்லைன் வழியாக வரும் ஜூலை 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. பொறியியல் படிப்பில் சேர தமிழகம் முழுவதும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். நீலகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய ஆளுநர் ரவி, வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும், பேரம் பேசுவதில் அவர்கள், மிக கடினமான தன்மைContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

வெளிநாடு சென்றால் மட்டும் முதலீடுகள் வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் பற்றி ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார். உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றார். வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள் என்றும் கூறினார். உலகளாவியContinue Reading

  • தமிழ்நாடு,  

June 05, 23 செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்தது. கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தபோதிலும், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துContinue Reading

  • இந்தியா,  

June 05,23 இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிக்கான தரவரிசைப் பட்டியலை என்.ஐ.ஆர்.எப் டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ராஜ் குமார் ரஞ்சன் சிங் இந்த பட்டியலை வெளியிட்டார். இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின்Continue Reading

  • இந்தியா,  

June 05, 23 ” நீதிக்கான போராட்டத்தில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் “ என சாக்‌ஷி மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 05,23 ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசா கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்ததோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இவ்விபத்துக்கு ரயில்வே துறை மற்றும் மத்திய அரசின் அலட்சியப்போக்கே காரணம் என துறைசார் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும்Continue Reading

  • இந்தியா,  

June 05, 23 ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்பாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பி உள்ளார். ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்து. இந்த விபத்தால் நாடு அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தContinue Reading

  • இந்தியா,  

June 05, 2023 காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் வரும் ஜூலை ஏழாம் தேதி மாநிலத்திற்கு புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் தாவண்கரே மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் சித்தராமையா அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் ஜுலை மூன்றாம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் கூட்டத்தொடர் துவங்கும். அதன்பிறகு ஜுலை ஏழாம் தேதிContinue Reading

  • இந்தியா,  

June 05, 23 வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது: மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி என வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து சிவசேனைContinue Reading