• வானிலை செய்தி,  

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

  • வணிகம்,  

ஜூன்.1 சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்கவும், தேவைப்பட்டால் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் இங்கு தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிநவீன வந்தே பாரத் ரயில்Continue Reading

  • இந்தியா,  

ஜூன்.1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று நேரில் சந்திக்கிறார். அப்போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஜூன்.1 தமிழக அரசை கலந்தாலோசனை செய்யாமல் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியContinue Reading

  • சுற்றுலா,  

ஜூன்.1 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா மே 21-ம் தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஜூன்.1 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

அரசு பேருந்துகளில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அளித்து இருக்கும் வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறுContinue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  

May 31, 2023   மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநிலContinue Reading

  • இந்தியா,  

May 31, 2023 ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் திரைத்துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் ஓ.டி.டி. தளம் திரைத்துரியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படங்களில் இருப்பது போன்று, ஓடிடி தளங்களுக்கு தணிக்கைContinue Reading

  • இந்தியா,  

May 31, 2023 பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி போலீசாரின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவர்களின் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம். விளையாட்டிற்கும் விளையாட்டு வீரர்களுக்கும்Continue Reading