• இந்தியா,  

May 31, 2023 பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி போலீசாரின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவர்களின் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம். விளையாட்டிற்கும் விளையாட்டு வீரர்களுக்கும்Continue Reading

  • இந்தியா,  

May 31, 2023 காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக அம்மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மூலம் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்,Continue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  

May 31, 2023 மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமார் பேச்சுக்கு மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை , வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 72 லட்சம்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.31 சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தமிழகம் திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளா்களை அழைப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான்Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.31 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தContinue Reading

  • உலகம்,  

மே.31 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ள ராகுல்காந்தி, அந்நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய ராகுல்காந்தியை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஆவார். இந்த 10 நாள் சுற்றுப்பயணத்தின்போது, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்Continue Reading

  • இந்தியா,  

மே.31 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, மல்யுத்த வீராங்கனைககள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டத்தை விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிமாக கைவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் மரணமடைந்தது தொடர்பாக தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென அவரது தாயார் செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து அந்தப்Continue Reading

  • இந்தியா,  

May 30, 2023 சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வரும் 15ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளார். சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும்Continue Reading

  • இந்தியா,  

May 30, 2023 மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த யாத்ரீகர்களின் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் அறிவித்தார் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் ஜம்முவில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 55க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்த விபத்தில், இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக ANI செய்திContinue Reading