• இந்தியா,  தமிழ்நாடு,  

May 30, 2023 சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கருத்து உண்மை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை வழங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில வாரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்குContinue Reading

  • இந்தியா,  

May 30, 2023 தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு வேதனையுடன் பதில் அளித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதற்காக கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பிரதமர் மோடி, சோழர்Continue Reading

  • இந்தியா,  

May 390, 2023 நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே, சோழர்களின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதி, நல்லாட்சியின் அடையாளம்Continue Reading

  • தமிழ்நாடு,  

May 30, 2023 அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு.பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.30 திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.30 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி நுழைந்த அரிக்கொம்பன் யானை தாக்கியத்தில் காயமடைந்த பால்ராஜ் என்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ‘அரிக்கொம்பன்’ என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்திContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.30 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 15ம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Continue Reading

  • உலகம்,  

மே.30 ஐப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அந்நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னையில் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, கடந்த 23-ந் தேதியன்று சிங்கப்பூர் சென்றContinue Reading

  • விளையாட்டு,  

மே.30 ஆமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக்Continue Reading

  • விவசாயம்,  

மே.30 தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.Continue Reading