• தலைப்புச் செய்திகள்,  

மே.26 சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகின்றனர். இதில்,Continue Reading

  • இந்தியா,  

மே.26 தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.Continue Reading

  • இந்தியா,  

மே.26 இந்தியாவில் 3 ஆயிரம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், 10500 மருந்து உற்பத்தி கூடங்களும் செயல்பட்டுவருகின்றன. இவற்றின் மூலம் தரமான, விலை மலிவான மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அந்த வகையில், மருந்து உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் இருந்துவருகிறது. உலகளாவிய தடுப்பூசி தேவையில் 50 சதவீதத்தை இந்தியா தான் பூர்த்தி செய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66Continue Reading

  • உலகம்,  

மே.26 தமிழக முதலமைச்சர் 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று ஜப்பான் சென்றடைந்தார். சென்னையில் 2024 ஜனவரியில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்றுContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.26 தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, அவற்றின் விவரங்களை ஒரு மாதத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான கெடு 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து,Continue Reading

  • விளையாட்டு,  

மே.26 சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கான முதல் தகுதிப்போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, விதிகள் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், தோனி உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 16வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

May 25,2023 நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள்Continue Reading

  • இந்தியா,  

May 25, 2023 புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியரசு தலைவர் திறந்து வைக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம்Continue Reading

  • உலகம்,  

May 25, 2023 பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.Continue Reading

  • இந்தியா,  

May25,2023 டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறைContinue Reading