• இந்தியா,  

மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.20 தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன்,Continue Reading

  • சுற்றுச்சூழல்,  

மே.20 கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்களாக நடைபெற்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி,Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.20 தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் பயிற்சி அகாடெமியின்Continue Reading

  • உலகம்,  

மே.20 ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வரும் 23ம் தேதி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, சீன அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரின் ஆரம்பத்தில் இருந்தே சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. ஒன்றரை ஆண்டாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை நிறுத்துமாறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்தது.Continue Reading

  • இந்தியா,  

மே.20 ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்குContinue Reading

  • வானிலை செய்தி,  

மே.20 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்துவருகிறது. வேலூர், திருத்தணி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தContinue Reading

  • விவசாயம்,  

மே.20 தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மூலனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.19 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரைContinue Reading

  • Uncategorized,  

மே.19 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்ற வேண்டும் என்று ரிசர்வு வங்கி கெடு விதித்து இருக்கிறது. அதற்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் 2 ஆயிரம் ரூபாய்Continue Reading