• விவசாயம்,  

மே.19 பொள்ளாச்சி-ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை (மே.20) நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் குடியிருப்புப் பகுதிகளில் பாகுபலி யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இதில் வனப்பகுதியில் கடந்த சிலContinue Reading

  • இந்தியா,  

மே.19 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி, வரும் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துகிறார். ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்திContinue Reading

  • சுற்றுலா,  

மே.19 கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதன்படி, நேற்று திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாContinue Reading

  • உலகம்,  

மே.19 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பான் வந்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஜி7 உச்சி மாநாடு வரும்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.19 தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம்Continue Reading

  • இந்தியா,  

துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் கோகல் சந்த் – கேசரி தேவி தம்பதிக்கு 1951ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மகனாகப் பிறந்தார் ஜக்தீப் தன்கர். ராஜஸ்தானில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்த இவர், மறைந்த விஜய் சங்கர் வாஜ்பேயியின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கார்த்திகேயContinue Reading

  • தமிழ்நாடு,  

May 18,2023 கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து உரிய விசாரணை நடத்துமாறு ஈபிஎஸ் புகார் மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர்.  இது தமிழகம்  முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

May 18,2023 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. அதில் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்தContinue Reading

  • இந்தியா,  

May 18, 2023 கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா,  அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. கர்நாடகContinue Reading