• இந்தியா,  

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தெலங்கானா முதல்வரின் மகன் கேடிஆர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, வாக்கு பதிவு எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்ட 223 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 65 இடங்களில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

  • இந்தியா,  

மத்திய புலனாய்வு அமைப்பு எனப்படும் சிபிஐ-யின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய குழு சிபிஐ இயக்குனரை தேர்வு செய்கிறது. இந்நிலையில், சிபிஐ-யின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்Continue Reading

  • தமிழ்நாடு,  

விசிக தலைவர் திருமாவளவன், இனியாவது அதிமுக விழித்துக்கொள்ள வேண்டும், பாஜக உடனான கூட்டணியை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “கர்நாடக தேர்தல் முடிவுகளால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, சவாலாக இருக்காது. தேர்தல்களில் நிறைய முறை திராவிடத்தையும் மக்கள்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

கள்ளச் சாராயம், போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு, தொழில் துறையின் மையமாக விளங்கிய தமிழ்நாடு, மருத்துவக் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு, சுகாதார மையமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று பாலியல்Continue Reading

  • இந்தியா,  

கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை, இன்று இல்லையென்றால் நாளை வெற்றி பெறுவோம் என நடிகை நமிதா தெரிவித்துள்ளார். கோவை தெற்கு பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவருக்கும் அன்னையர்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தமிழ்நாட்டில் அமைச்சரவையை தொடர்ந்து, முக்கிய அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர், நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை செயலாளராகவும், போக்குவரத்துத்துறைContinue Reading

  • இந்தியா,  

MAy13,2023 “காங்கிரஸ் அலுவலகம் எங்களின் கோயில். அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம்.” – டி.கே.சிவகுமார் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பா.ஜ.க 70-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. முழுமையான முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் 120 இடங்களை நிச்சயமாக காங்கிரஸ் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.Continue Reading

  • இந்தியா,  

May13,2023 கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சமூக வலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக செயல்பட்டார். அதே நேரத்தில் கர்நாடக தேர்தலுக்கான வார் ரூம் பொறுப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் , தமிழகத்தை சேர்ந்தவருமான சசிகாந்த் செந்திலைContinue Reading

  • இந்தியா,  

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதைத்Continue Reading

  • இந்தியா,  

May 13,2023 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. காங்கிரஸ், பாஜக நேரடியாக போட்டிக் களத்தில் இருக்கின்றன. மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம். காங்கிரஸ் கட்சி இந்த முறை மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, பிரிங்கா காந்தி, சிவக்குமார், சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும்Continue Reading