• தலைப்புச் செய்திகள்,  

மே.10 தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் நிலுவையும் உயரும் நிலை உருவாகியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், அன்றாட நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு, இடைக்கால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை தயார்Continue Reading

  • இந்தியா,  

மே.10 மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து கோரும் ‘மெய்தி’ இன மக்களுக்கு எதிராக பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தால் கலவரம் வெடித்தது. இதையடுத்து, மணிப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கலவரத்தை ஒடுக்க ராணுவமும் வரவழைக்கப்பட்டது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரிவருகின்றனர். இவர்களுக்கு அந்த தகுதியை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பினரிடையேContinue Reading

  • வானிலை செய்தி,  

மே.10 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.Continue Reading

  • இந்தியா,  

மே.10 கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுககான பிரச்சாரம் தீவிரமானது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகியContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே 9 தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பததாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்ற, அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதியContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சேகர் பாபு. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்களில் ஒருவராக திகழ்ந்துContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிடிபட்ட ரொக்கம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு கடந்த தேர்தலை விட 4.5 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் போதே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கண்டிப்புடன் ஒரு விஷயத்தை முன்வைத்தார். அதாவது, பணப்பட்டுவாடா தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொள்வோர் மீதுContinue Reading

  • இந்தியா,  

மத்திய அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் பேசியது தவறு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத தனி இட ஒதுக்கீட்டை ஆளும் மாநில பாஜக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில்Continue Reading

  • உலகம்,  

அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரானார். அப்போது அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர்,Continue Reading

  • இந்தியா,  

கேரளா படகு விபத்து தொடர்பாக அம்மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் உள்ள கடற்கரையில், 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில்Continue Reading