• இந்தியா,  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. நேற்று காலை பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஓ.பன்னீர் செல்வமும் – டிடிவி. தினகரனும் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்து இருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே கட்சியாக இல்லாமல் ஒரே நோக்கத்துடன் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடையாறில் உள்ள இல்லத்திற்குச் சென்று டிடிவி தினகரனை சந்தித்தார். இருவரும் சிறிது நேர சந்திப்புக்கு பின், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், எப்போதுContinue Reading

  • தமிழ்நாடு,  

கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி திருடபட்டுள்ள தகவல் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் ரூ.288.38 கோடி பொது மக்கள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ரூ.106 கோடி முடக்கப்பட்டு, ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதும், 29 பேர் மீதுContinue Reading

  • தமிழ்நாடு,  

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர் சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்ட சுமார் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 251 வழித்தடங்களில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வருகின்றன. பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும்Continue Reading

  • இந்தியா,  

டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இணைந்து உரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் ரேஸில் இருக்கும் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இணைந்து உரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடாகாவில் இன்னும் மூன்று நாட்களில் அதாவது மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் என்பது பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தென் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதாலும், அங்கு காங்கிரஸ்Continue Reading

  • இந்தியா,  

பஞ்சாபில் டைம்ஸ் நவ் செய்தியாளர் பாவனா கிஷோர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பக்வந்த் சிங் மன் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லூதியானாவில் ’ஆம் ஆத்மி கிளினிக்’ திறப்பு விழாவிற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்ற பெண் ஒருவர்Continue Reading

  • இந்தியா,  

ராஜஸ்தானில் போர் விமான வீட்டின் மீது விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். சூரத்கர் விமானத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இந்தியன் ஏர் ஃபோர்ஸ் MiG-21 ரக போர் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரங்களில் போர் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனை சரிய செய்ய முயன்றார் விமானி. ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. இதனை அறிந்த விமானி எமர்ஜன்ஸிContinue Reading

  • இந்தியா,  

கேரள மாநிலத்தில் நேற்று மாலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் உள்ள கடற்கரையில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இதனால் குறைவான நபர்கள் செல்ல வேண்டிய படகில் அதிகமான நபர்கள் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 2 அடுக்குContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த வாரம் திங்கள் கிழமைContinue Reading

  • தமிழ்நாடு,  

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளில் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்தContinue Reading