• தமிழ்நாடு,  

மே.6 தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்Continue Reading

  • இந்தியா,  

மே.6 நான் ஒரு பைசா ஊழல் செய்துள்ளதாக நிரூபித்துவிட்டால்கூட என்னை பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.6 சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் செயல்பட்டுவரும் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணைContinue Reading

  • விளையாட்டு,  

மே.6 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வதுContinue Reading

  • இந்தியா,  

மே.6 இரு நாட்டு எல்லை பகுதியில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்பட வாய்ப்பில்லை என சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவுContinue Reading

  • சினிமா,  

மே.6 கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட புரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கை முற்றுகையிட முயன்ற போது தமுமுக-வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.6 திருப்பூரில் பிரிண்டிங் நிறுவனத்தின் கட்டுமான சுவர் சரிந்து விழுந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் – கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(வயது40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தக் கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(வயது50), பிரவீன்(வயது22) ஆகியோர் வேலைContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.6 நீலகிரி மாவட்டம் கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் சேதடைந்தது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அய்யன்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூவமூலா அருகேContinue Reading

  • உலகம்,  

மே.6 உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்குழு அறிவித்துள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டது. இதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்தContinue Reading

  • இந்தியா,  

இங்கிலாந்து அரசராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டவுள்ள விழாவிற்கு இந்திய அரசு சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்ர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ராணி 2-ம் எலிசபெத் நீண்ட காலம் ராணியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டவுள்ளார். அதன்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரின்Continue Reading