• சுற்றுலா,  

மே.5 தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த ஒரு வாரமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் தடை விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர்ந்துContinue Reading

  • இந்தியா,  

மே.5 தேசியவாத காங்கிரஸின் (என்சிபி)தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகள் தலைவராக சரத் பவார் பதவி வகித்துவந்தார். இந்த சூழலில் கட்சியை கைப்பற்றுவதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும்Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.5 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நோளை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்றும், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மே 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.5 சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டி.என்.பி.எஸ்.சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்ற பெண், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிContinue Reading

  • தமிழ்நாடு,  

சு.வெங்கடேசன் எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “திராவிட மாடல் செத்துப்போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள்மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.Continue Reading

  • இந்தியா,  

கர்நாடகாவில் காவிரி ஆறு குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மே 2-ஆம் தேதி வெளியானது. அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பேருந்து சேவை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், மேகதாது அணை கட்டContinue Reading

  • இந்தியா,  

மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளது, கலவரக் காரர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் நீடித்து வரும் கலவரத்தை தடுத்து நிறுத்துமாறு பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரிகோம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் கலவரம் குறித்து வேதனைப்பட்டுள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம். மணிப்பூர் மாநிலத்தில் மெய்திContinue Reading

  • இந்தியா,  

சூடானில் சிக்கித் தவித்த இந்திய பழங்குடி மக்களை, ஆபத்துக்களுக்கு மத்தியில் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை இந்திய ராணுவமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பத்திரமாக மீட்டு வருகின்றன. சூடானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களைContinue Reading

  • இந்தியா,  

தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வீராங்கனைகளை நேற்றிரவு போலீஸார் கையாண்ட விதத்துக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி ‘பாஜகவின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கம் வெற்று கோஷம், கேலிக்கூத்து மட்டுமே’ என்று அவர் விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருடன் போலீஸார் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்தContinue Reading

  • இந்தியா,  

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வழக்கை முடித்து வைத்தது. மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தContinue Reading