• விளையாட்டு,  

மே.1 மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமானContinue Reading

  • சினிமா,  

மே.1 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் பர்ஸ்டலுக் வெளியாகியுள்ளது. அதில், கதை நாயகனான உதயநிதி ஸ்டாலின் வாளுடனும், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்டப்பிலும் மாஸ் காட்டியுள்ளனர். தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்ற பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.Continue Reading

  • இந்தியா,  

மே.1 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பரப்புரையானது மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிடுகிறார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமையகத்தில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியானContinue Reading

  • இந்தியா,  

பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ (Mann Ki Bath) உரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30ம் தேதி) ஒலிபரப்பானது. பிரதமா் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த 2014, அக்டோபா் முதல் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷனில் பிரதமரின் உரை ஒலிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரதமர், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதுடன், பல்வேறுContinue Reading

  • தமிழ்நாடு,  

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா கடற்கரை என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காகContinue Reading

  • தமிழ்நாடு,  

மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, தொழிலாளர்Continue Reading

  • இந்தியா,  

மாநிலத்தில் நிலையற்ற அரசாங்கம் அமைந்தால் அதன் கவனம் அதிகாரத்தை காப்பாற்றுவதில் இருக்குமே தவிர, மக்களுக்கு சேவை செய்வதில் இருக்காது என்று கர்நாடக மக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறியதாவது: சாமானியர்களை பற்றி பேசுபவர்கள், தங்களின் ஊழலை வெளியே கொண்டு வருபவர்கள், தங்களின் சுயநல அரசியலைத் தாக்குபவர்கள் அனைவரையும் காங்கிரஸ் வெறுக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மீது காங்கிரஸின் வெறுப்பு நிரந்தமாகி விடும். இந்தContinue Reading

  • இந்தியா,  

பிரதமர் மோடி நீலகண்டனை போன்றவர், நாட்டு மக்களுக்காக காங்கிரஸின் விஷகும்பத்தில் இருந்து வெளியேறும் விஷம் முழுவதையும் குடித்து வருகிறார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கர்நாடகாவில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்தியContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் அண்மையில் மேற்கு வங்கம் சென்று அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி சந்தித்துContinue Reading