• இந்தியா,  

நாளை (ஏப்ரல் 27) டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். நாளை மறுதினம் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு,Continue Reading

  • தமிழ்நாடு,  

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு அருகே தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளைContinue Reading

  • தமிழ்நாடு,  

ஐ.நா வேண்டுகோளை நிராகரித்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜுக்கு தூக்குத் தண்டனையைச் சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நபருக்குச் சிங்கப்பூர் அரசு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாகத் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரும் கைது செய்யப்பட்டார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார், கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு. எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கனகராஜிடம் கடந்த வாரம் புலனாய்வுக்குழு விசாரணைContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.26 நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்கா விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.26 தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாகி அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் அவர் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போதுContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்கவுள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புலிகேசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில, அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்றுContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.26 அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து,Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.26 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ்Continue Reading