முதியவருக்கு உதவி -பாஜகவினருக்கு பாராட்டு
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.24 பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார். இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்டContinue Reading

ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் வாபஸ்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Continue Reading

கேரளா வருகிறார் பிரதமர் மோடி
  • இந்தியா,  

ஏப்ரல்.24 இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளா வருகிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை மத்தியபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார்.Continue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்
  • இந்தியா,  

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதிவேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 3Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல் 23 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி , போக்கர் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதிContinue Reading

  • தமிழ்நாடு,  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி புகார் அளித்துள்ளார். அவர் அளித்து உள்ள புகார் மனுவில் தன்னை பாலியல் ரீதியாக விக்கிரமன் துன்புறுத்தியதாகவும் ஜாதியின் பெயரைக் கூறி அவமதித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னை ஏமாற்றி 12 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் புகாரில் கிருபா முனுசாமி குறிப்பிட்டுள்ளார். விசிக கட்சி சார்பில் விக்கிரமன் மீதுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலகலம் பூண்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம். இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

சேலத்தில் டாஸ்மாக் கடையில் காலையிலேயே மது விற்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, குடித்துக் கொண்டிருந்தவர்களை கடைக்குள் வைத்துப் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைக்குள் சிக்கிக்கொண்ட குடிகாரர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சேலம் டவுன் பேருந்து நிலையம் அருகே உள்ள தாதுபாய் குட்டை டாஸ்மாக் மதுபான கடையில் இந்த நிகழ்வு அரங்கேறியது. வழக்கம் போல இந்த மது பான கடையில உள்ள பாரில் இன்று காலையிலேயே குடித்து கொண்டிருந்தனர்.அதுவும்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மையை அரசு கண்டறிய உத்தரவிடக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம்Continue Reading