கோவை விமானநிலைய விரிவாக்கம் - பிடிஆர் விளக்கம்
  • இந்தியா,  

ஏப்ரல்.23 கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது. விமான நிலையம் இந்திய விமான நிலையContinue Reading

  • Uncategorized,  

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து,Continue Reading

  • Uncategorized,  

ஏப்ரல் 22 திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, டிஆர் பாலு உள்பட திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து பட்டியல் என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை சில ஆவணங்களை கடந்த வாரம் வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் ஆவணங்கள் போலியானவை என்றும் அவற்றில் உண்மையில்லை என்றும் திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

குஜராக் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியது லக்னோ அணி. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.Continue Reading

சாகுந்தலம் - சோகத்தில் சமந்தா
  • சினிமா,  

ஏப்ரல்.22 சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியாக சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தின் முதல் வார வசூல் பத்தில் ஒரு பகுதியாக மட்டுமே இருந்ததால் நடிகை சமந்தா சோகத்தில் மூழ்கியுள்ளார் நடிகை சமந்தாவின் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் பொருட்செலவில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் கதை அடிப்படையாகக் கொண்டு பான் இந்தியா திரைப்படமாக ‘சாகுந்தலம்’ திரைப்படம்Continue Reading

சத்யபால்மாலிக்கிற்கு சம்மன் -சிபிஐ நடவடிக்கை
  • இந்தியா,  

ஏப்ரல்.22 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்தியபால் மாலிக் இருந்தபோது, அனில் அம்பானியின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில்Continue Reading

தமிழகத்தில் ரமலான் கொண்டாட்டம்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.22 தமிழகத்தில் ரமலான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்று, ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஈகைத்திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான்Continue Reading

உதகை 200 கொண்டாட்டம்
  • தமிழ்நாடு,  

நீலகிரி மாவட்டத்தில் உதகை வெளியுலகத்திற்கு அறிமுகமானதன் 200 வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்புச் சுவர்களில் வரையப்பட்டுவரும் வண்ண வண்ண ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு, கோவை ஆட்சியராக இருந்த ஜான் சலிவன் என்பவர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்துவைத்து, உதகை நகரத்தையும் கட்டமைத்தார். இதைத் தொடர்ந்து, தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள்Continue Reading

கோவை -ஷீரடிக்கு சிறப்பு ரயில்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.22 கோவையிலிருந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மே.1ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் , சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் தளங்கள் சார்ந்து பாரத் கெளரவ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி,Continue Reading